அன்புமிக்க நண்பர்களே,
சில நாட்களுக்குப் பிறகு உங்களோடு சில நொடித் துளிகளை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களோடு பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியானதும், உங்களை காண வாய்ப்புள்ளதுமான ஒரு நாள் வந்திருக்கின்றது.
ஆம்! எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எனது திருமண நாள் ஜூலை 2. நண்பர்களே, நீங்கள் நினைக்கலாம், "இவன் கல்யாண கார்டு அனுப்பாம மெயில் அனுப்பியிருக்கானே" என்று. நான் ஏன் பல நாட்களுக்கு முன்னதாகவும், மின்னஞ்சலிலும் உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றால், நமது நண்பர்கள் பலருக்கு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறைக்கு திட்டமிட்டால் தான் அவர்கள் விடுமுறை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
நண்பர்களே! நான் திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். எனவே நேரில் வந்து அழைப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. அதனால் முதற்கட்டமாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், இன்னும் சில நாட்களில் தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளேன்.
இந்த திருமண நாள், நமது நடுப்பட்டி நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என நம்புகின்றேன். திருமண நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே நண்பர்கள் அனைவரும் வந்து, நமது நினைவலைகளை பகிர்ந்து கொள்ள நட்போடு அழைக்கின்றேன்.
தாய் தமிழகத்தில் உள்ளவர்களின் வருகையையும், அயல் தேசத்தில் உள்ளவர்களின் வாழ்த்துக்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
அன்போடும், உங்கள் வருகையைக் காண ஆவலோடும்,
நண்பன் சுதாகர்.
பின்குறிப்பு:
நண்பர்களே, உங்களை ஒருங்கிணைத்து, அழைத்து வருவதற்கு நண்பன் சிரில் உதவுவான். அவன் உங்களை கூடிய விரைவில் தொடர்பு கொள்வான்.