நமக்கு பெரும்பாலும் வரும் அழைப்பு திருமண அழைப்பு தான். ஒரு சிலர் தங்கள் அண்ணன், தங்கை திருமணத்திற்கு அழைக்கிறார்கள் அல்லது தங்கள் திருமணத்கிற்கு அழைக்கிறார்கள். ஆனால் நமக்கு வாய்ப்புகள் ஒரளவு வாய்ப்பது அல்லது நாம் செல்ல முயற்சி எடுப்பது நண்பர்களின் திருமணத்திற்கு தான்.
சரி திருமணத்திற்கு அழைத்தாயிற்று அடுத்தது எத்தனை பேர் வருவார்கள் என விசாரித்து அவர்கள் தங்க அறை எங்கே எடுப்பது யார் அவர்களை கவனித்து கொள்ள அனுப்புவது போன்ற திட்டமிடல்கள் தொடங்கி விடுகின்றது.
இது எதற்காக?
இது எதற்காக?
அவர்களின் வாழ்த்துக்களை பெறுவதற்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் அவர்களுடன் ஒரு மகிழ்வான தருணத்தை பகிர்ந்திருக்கிறோம் என்றும் நினக்கலாம். ஆனால் வந்தவர்க்கள் என்ன செய்கிறார்கள்? மண்டபத்தில் எத்தனை மணி நேரம் என்பதை விட எத்தனை நிமிடங்கள் இருந்தார்கள் என்று கணக்கிடும் வகையில் மட்டுமே அவர்க்கள் இருப்பு உள்ளது. இது சரி தானா?
சரியே! எப்படி?