Friday, November 9, 2012

My Sweet Kutties

Harini & Hamsini by Ayyasami

Tuesday, July 10, 2012

நாஞ்சில் நாட்டில் ஏழ்வர்


லெபின் திருமணத்தில்






























திற்பரப்பு அருவியில்



















ஜெகதீசின் இல்லத்தில்


சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு

வருகை புரிந்தோர்: கும்பகோணம் கார்த்தி, திருப்பூர் ரமேஸ், கந்தசாமி, கிங்க்ஸ்டன், சைக்கிள் சுபினெர், கோழி ஜெகதீஸ் & சிரில்

Tuesday, June 19, 2012

லெபின் அழைக்கிறார்..

            நமது நண்பர் PCT லெபின் தனது திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார். தவறாது வருகை புரிந்து வாழ்த்தி லெபின் அவர்களின் சொந்த செலவில் கன்னியாகுமரி & திருவனந்தபுரம் பகுதிகளை சுற்றி பார்த்து நீங்கள் மகிழ்வுடன் வீடு திரும்ப வேண்டும் என அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.

தனது திருமணத்திற்கு வருபவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை லிபின் விதித்துள்ளார்:  
லிபின் கூறியதாவது....
1. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரணும்ல.
2. யேன் செலவுலதாண் எல்லாரும்* உங்கள் சொந்த ஊரிலிருந்து வர
ணும்.
3. கல்யாணத்தன்னிக்கு நான் ஏற்பாடு செய்யும் இன்னோவா (A/C) காரில்தான் போனும் வரணும்.
4. மேற்படி செலவ எங்கிட்ட வாங்கிக்கோங்கடே.
5. இதர செலவுகளுக்
கு பால் (சைக்கிள்) சுபினெர்ட்ட ரூபாய் 17,600 கொடுத்திருக்கேன்.
6. செலவில்லாமல் வந்து அளவில்லா மகிழ்ச்சியோடு செல்லவேண்டும் மக்களே.


எனவே கண்டிப்பாக கலந்துகொள்வோம்.




 குறிப்பு: (நிபந்தனை 2) நீங்கள்* வந்து போகும் போக்குவரத்து செலவினையும் லெபினிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்
* (அயல் நாட்டு நண்பர்களுக்கும் பொருந்தும்).


இடம்: நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
நாள்: 05/07/2012

தொடர்புக்கு: 74020 42674 / 96291 54838

Sunday, May 27, 2012

வாழ்த்துவோம் வாருங்கள்...

நமது பாசத்திற்குரிய நண்பன் ரவிசங்கர் தனது திருமணத்திற்கு வருமாறு நண்பர்கள் யாவரையும் நெல்லை சீமைக்கு  அழைக்கிறார். தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.

நாம் EICT ஐ கடந்து வந்து 10 வருடங்கள் ஆகின்றது. அனைவரும் ஒன்று கூடி சந்திக்கும் வாய்ப்பினை எதிர்பார்த்து நண்பர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். அதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். கண்டிப்பாக கலந்துகொள்ள முயலுவோம்.

இடம்: திருநெல்வேலி
நாள்: 01/06/2012

Monday, February 20, 2012

சொல்லாமலே.....


நண்பர்களே,
         நாம் நடுப்பட்டியை விட்டு வந்து பத்து வருடங்கள் ஆகின்றது என்பதனை நினைக்கையில் "பத்து வருசமாயிட்டா" என்று ஆச்சரியக் குறி தான் வருகிறது. காரணம் நமக்கு சரியானதொரு ஒய்வோ அல்லது நின்று நிதானமாக பயணிக்கக்கூடிய வாழ்வோ அமையவில்லை. 

வருடங்களின் வலிகள், மகிழ்வுகள், வெற்றிகள் யாவும் ஒரு சில நிமிடங்களே  நம்மை அக் காலக்கட்டங்களில் இருத்தி வைக்கின்றது.  நாம் மட்டுமல்ல இந்த் நூற்றாண்டின் நகர் மக்கள் யாவரும் இந்நிலையிலே தான் உள்ளனர்.















சில திட்டங்கள் நீண்ட காலமாக தீட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது சொதப்பி விடும். ஆனால் திட்டமிடாமலேயே சிறப்பாக அமையக்கூடிய நிகழ்வுகளும் உண்டு. இங்கிருக்கும் நாங்கள் சந்தித்தது 2 வது வகை நிகழ்வு. 48  மணி நேரத்திற்குள்ளாக திட்டமிட்டு 8 பேர் ஒரு நாள் முழுவதும் பத்து வருடங்கள் பின்னோக்கி சென்றது, மகிழ்வான நிகழ்வாகும்.

கேட்டவுடன் அனைவரும் வருகிறோம் என சொல்லி, சொன்ன நேரத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் சிலரை அழைக்க இயலவில்லை என்பதை விட தொலைவில் உள்ளவர்களை வீணாக கட்டாயப்படுத்த வேண்டாம் என நினைத்ததால் பலரிடமும் சொல்லவில்லை.

ஆக மொத்தம் மதுரை சந்திப்பு நமக்கு தித்திப்பு.

  

வந்திருந்தவர்கள்:
சுதாகர், கிருஸ்ணபிரகாஸ், கிங்க்ஸ்டன் பினு, கந்தசாமி, இளவரசன், பால் சுபினெர், பொன்ராஜ் & சிரில்.
நாள்: 19/02/2012     இடம்: மாட்டுத்தாவணி, மதுரை.