Monday, September 8, 2008

பிடித்தது புளியங்கொம்பா?

மூன்றாம் தேதி நண்பன் பாக்கியராஜின் திருமணம் சிறப்பாக முடிந்தது. எதிர் பாரா திருப்பமாக பாஸ்கரை(Computer) சந்திதேன். அநேகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என நம்புகின்றேன். நல்ல வசதியான குடும்பத்தில் பெண் எடுத்துள்ளான் பாக்கியராஜ். பலருக்கும் அழைப்பு அனுப்பவில்லைஎன்று வருத்தப்பட்டார்கள், மறந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவன் துபாயில் இருந்து வந்ததே திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகத்தான். இதில் வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் பத்தாம் தேதி அவன் மீண்டும் துபாய் செல்கின்றான், வருவதற்கு ஒரு வருடம் ஆகுமாம்.
இப்படிப்பட்ட திருமனங்களை காணும்பொழுது நிச்சயம் மாப்பிள்ளையை விட மணப்பெண்ணின் மீதுதான் பரிதாபம் பிறக்கின்றது! எது எப்படி இருப்பினும் பிடித்தது புளியன்கொம்பாக இருப்பதால் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகின்றேன், ஏனெனில் வரும்போது கம்பெனிக்கு முதலாளியாகத்தான் வருவான். Company name Sangeetha(Wife Name) Chemicals

No comments: