கடுமையான காலச் சூழலில், வேலைப்பளுவைக் குறைத்து நமது சொந்த ஊருக்கு செல்வதென்றாலே மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய அம்சமாகும். அதுவும் கண்காணா தேசத்திற்கு சென்று காய்ந்து; மீண்டும் நம் செழிப்பான? நாட்டிற்கு திரும்புதல் என்பது எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும். ஆம் நமது நண்பர்களில் அந்தோணி தீப ராஜா, வசந்த், கார்த்திக் குமார் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் இந்த மாதத்தில் விடுமுறையில் வந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த காலக்கட்டத்தில் விடுமுறைக்கு வந்து திருமணம் முடித்த பாக்கியராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருக்கு வாழ்த்து சொன்னது??!! உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல தற்சமயமும் யார் யார் திருமணம் முடிக்க போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருப்போம்.
இவனால் இன்பமெங்கும் நிறைந்திருக்கவேண்டுமென்று;
என் தாய் எனை ஈன்றாள்
வளர்ந்தேன் நட்புமிகுதியோடு
உணர்தேன் உலகை - வளர
வளர வாழ்வின் நிஜங்களை
கண்டு துடித்தேன் - இதுதான்
என் தேசத்தின் தலைவிதியோ
படிக்க சொன்ன இடத்தில்
பார்க்க வேலையில்லை
வேலை பார்க்க சென்றவிடத்தில்
பார்க்க என் உறவுகளில்லை - அடடா
மூறு வேளை சாப்பாட்டுக்கு
முக்கடலையும் முப்பெரும் மலைகளையும்
தாண்டினேன்; கிடைத்ததா நிம்மதி?
அடைந்தேனா செல்வங்களை - எண்ணுகிறேன்
எதைப் பெற்றேன்? எதை இழந்தேன்?
மீண்டும் செல்வேனா? மீளவும் அடைவேனா?
கல்யாணம் கண்டு; கல்
நெஞ்சனாய் அக்கரை போவேனா?
தினம் தினம் நினைவுகள்
மனதை சம நிலைப்படுத்துகின்றேன்
நம் தமிழர் போருக்காய் - தம்
வீட்டாரை மறந்து கடல்
கடந்து கடாரம் கொண்டதை!!!
நாற் திசைக்கும் சென்று
வணிகம் கொண்டு வாழ்ந்ததை எண்ணி;
நல் வெற்றிதானே வாழ்க்கை!!!
அதற்காக இழக்கலாம் சில இன்பங்களை!
அடையலாம் சிறு துன்பங்களை!
அன்புடன்,
பொள்ளாச்சியிலிருந்து தேவா.
ஏற்கனவே கடந்த காலக்கட்டத்தில் விடுமுறைக்கு வந்து திருமணம் முடித்த பாக்கியராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருக்கு வாழ்த்து சொன்னது??!! உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல தற்சமயமும் யார் யார் திருமணம் முடிக்க போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருப்போம்.
இவனால் இன்பமெங்கும் நிறைந்திருக்கவேண்டுமென்று;
என் தாய் எனை ஈன்றாள்
வளர்ந்தேன் நட்புமிகுதியோடு
உணர்தேன் உலகை - வளர
வளர வாழ்வின் நிஜங்களை
கண்டு துடித்தேன் - இதுதான்
என் தேசத்தின் தலைவிதியோ
படிக்க சொன்ன இடத்தில்
பார்க்க வேலையில்லை
வேலை பார்க்க சென்றவிடத்தில்
பார்க்க என் உறவுகளில்லை - அடடா
மூறு வேளை சாப்பாட்டுக்கு
முக்கடலையும் முப்பெரும் மலைகளையும்
தாண்டினேன்; கிடைத்ததா நிம்மதி?
அடைந்தேனா செல்வங்களை - எண்ணுகிறேன்
எதைப் பெற்றேன்? எதை இழந்தேன்?
மீண்டும் செல்வேனா? மீளவும் அடைவேனா?
கல்யாணம் கண்டு; கல்
நெஞ்சனாய் அக்கரை போவேனா?
தினம் தினம் நினைவுகள்
மனதை சம நிலைப்படுத்துகின்றேன்
நம் தமிழர் போருக்காய் - தம்
வீட்டாரை மறந்து கடல்
கடந்து கடாரம் கொண்டதை!!!
நாற் திசைக்கும் சென்று
வணிகம் கொண்டு வாழ்ந்ததை எண்ணி;
நல் வெற்றிதானே வாழ்க்கை!!!
அதற்காக இழக்கலாம் சில இன்பங்களை!
அடையலாம் சிறு துன்பங்களை!
அன்புடன்,
பொள்ளாச்சியிலிருந்து தேவா.