Friday, July 3, 2009

சுதாகரின் திருமணத்தில்

நண்பர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓடைப்பட்டி மண்ணின் மைந்தன் சுதாகரின் திருமணம் சூலைத் திங்கள் 2 ஆம் நாள் இனிதே நிறைவுற்றது. நண்பர்கள் அனைவரும் சந்திக்க இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும் என எண்ணியவாறு ஏறத்தாழ பதினோரு பேர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட படிப்பு முடிந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் சந்தித்தது சுதாகரின் திருமணத்தில்தான். பலருடைய முகங்களில் காலத்தின் மாற்றம் பெரிய அளவில் தெரியாவிட்டலும், அனைவரும் சற்று குழப்பமாகி பிறகு கண்டுபிடித்தது பொன்ராஜைத்தான்.

திருமணத்திற்கு முந்திய நாளே பலரும் வந்து தமது கருத்துக்கள், எதிர்காலம் குறித்த திட்டங்களை பகிர்ந்துகொண்டது, நெஞ்சத்தில் நெகிழ்ச்சியை உருவாக்கியது. திருமண நாளில் நமது நண்பர்களே மாப்பிள்ளைத் தோழர்களாய் வந்தது அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது. பல நண்பர்கள் அலைபேசியின் ஊடாக அவ்வவ்போது திருமணத்திற்கு வரமுடியாததின் வருத்தத்தையும், சுதாகருக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். சுதாகர் திருமணம் முடிந்து, அனைவரும் இனிய விருந்துண்டு மனமார வாழ்த்துக்களை தெரிவித்து ஒடைப்பட்டியிலிருந்து விடைபெற்றோம்.

அனைவரும் அவர்தம் ஊர்களுக்கு பிரிந்து செல்கையில் நண்பன் கும்பகோணம் கார்த்தி ஒரு அவசியமான கருத்தை முன் வைத்தார். ஆம் வருடத்திற்கு ஒருமுறையேனும் நம் நண்பர்கள் அனைவரும் ஓரிடம் கூடி நட்பினை ஆழப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். நிச்சயம் அருமையனதொன்றுதான், தற்சமயம் அதற்கு ஊன்றுகோலாய் அமைவது நண்பர்களின் திருமணம்தான். அத்திருமணங்களில் நாம் கண்டிப்பாய் கலந்து கொள்வதன் மூலம் நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாகின்றதல்லவா?
ஒடைப்பட்டியில் இருநாள்:




(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவும்)

No comments: