Wednesday, October 1, 2008

சக சகோதரனின் துயர் துடைப்பாயா?

அன்புமிக்க நண்பர்களே!
எப்போதும் இல்லாத் அளவிற்கு இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பிற்கு இந்தியாவில், இல்லை இல்லைதமிழகத்தில் ஏதேனும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு எதிர்ப்புகள்காணப்படுகின்றதா? என்றால் கடந்த காலங்களை ஒப்பிடும்பொழுது, தற்போதுநடப்பது மிகச்சொற்பமே என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆனால் ஈழ குமுகாயத்துக்கு அப்பொழுது அதைச்செய்தேன், நேற்று அதைமுடித்தேன் என்று அறிக்கைகளை மட்டுமே விடையாகத்தருகின்றார் நமதுமுதல்வர். அவர் மிகத்தீவிரமாக முயன்றால் மட்டுமே அங்குள்ளபிரச்சனைக்காக நடுவன் அரசு குரல் கொடுக்கும் என்ற சூழ்நிலையில், இந்தியஅரசே "தமிழர்களுக்கு எதிராக உதவி செய்கின்றது" என்ற தகவல் மனதில்வலியை ஏற்படுத்துகின்றது.

இது குறித்து எப்பொழுதும் குரல் கொடுத்து வரும் வைகோ அவர்களின் கருத்துஇதோ உங்கள் பார்வைக்கு,

''‌சி‌றில‌‌ங்க தீவில் சிங்கள இனவாத அரசு, கடந்த 50 ஆண்டுகாலமாக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந் துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சி‌றில‌ங்க அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு ராணுவ உதவியும், தளவாடங்களும், ராடார்களும் தந்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களையும், நிபுணர்களையும் ‌சி‌றில‌ங்க ராணுவ தாக்குதலுக்கு உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது செப்டம்பர் 9ஆ‌ம் தேதி வன்னியில் நடைபெற்ற சண்டையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

சி‌றில‌ங்க தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டுவதாக வைகோ கூறியுள்ளார்.
- நன்றி www.tamil.webdunia.com

No comments: