மாறி வரும் மாற்றங்களுக்கிடையே, புறா விடு தூது, ஓலை, மற்றும் கடிதம்!
நமது தலைமுறையில், நாம் கல்லூரி காலத்தில் அனுபவித்த ஒரு ஒப்பற்றதொரு தொடர்புச்சாதனம் கடிதம். இன்றைக்கு அதி சீக்கிரத்தில் மறக்கப்பட்டு, வலைத்தளம் இன்று நம் இதயங்களை வலைபோட்டு பிடித்து வைத்திருக்கின்றது. கடிதம் எழுதுவது எவ்வளவு அருமையானது என்பதை பலர் காதலியின் கடிதங்களை பார்த்து உணர்ந்திருப்பீர்கள், சிலர் நண்பர்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் கடிதங்களை பார்த்து நினைவலைகளில் மிதந்திருப்பீர்கள். அப்படிப்பட்டதொரு கடிதம் நம்மால் மறக்கப்பட்டது, ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் ஆகும். ஏன் இந்த கடிதமே வலைத்தளப்பதிவாக இருப்பது சிறிது மன வருத்தத்தையே ஏற்படுத்துகின்றது.
இத்தகைய சூழலில் இந்த வலை பதிவு ஏன் பதியப்படுகிறது என்றால், மறுபடியும் நம்மிடையே கடிதம் எழுதும் ஆர்வத்தை தூண்டிவிடுவதர்க்காகத்தான். நாம் நம் வார்த்தைகளை தாளில் எழுதும்பொழுது இருப்பதைவிட, அந்த கடிதத்தை பெற்ற நபர் நீண்ட நாட்களுக்குப்பிறகு அதனை எடுத்துப்படிக்கும்பொழுது அந்த கடிதம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தின் வீரியம் அதிகம்.
இதனை நாம் என்றேனும் கண்டிப்பாக உணர்ந்திருப்போம்.
அப்படிப்பட்டதொரு உணர்சிக்காலம் எவ்வளவு அருமையானது நண்பா!
அதை நாம் மீண்டும் உயிர்பிப்போமா?
உறவுகளை வளர்க்கவும்;நமது தலைமுறையில், நாம் கல்லூரி காலத்தில் அனுபவித்த ஒரு ஒப்பற்றதொரு தொடர்புச்சாதனம் கடிதம். இன்றைக்கு அதி சீக்கிரத்தில் மறக்கப்பட்டு, வலைத்தளம் இன்று நம் இதயங்களை வலைபோட்டு பிடித்து வைத்திருக்கின்றது. கடிதம் எழுதுவது எவ்வளவு அருமையானது என்பதை பலர் காதலியின் கடிதங்களை பார்த்து உணர்ந்திருப்பீர்கள், சிலர் நண்பர்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் கடிதங்களை பார்த்து நினைவலைகளில் மிதந்திருப்பீர்கள். அப்படிப்பட்டதொரு கடிதம் நம்மால் மறக்கப்பட்டது, ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் ஆகும். ஏன் இந்த கடிதமே வலைத்தளப்பதிவாக இருப்பது சிறிது மன வருத்தத்தையே ஏற்படுத்துகின்றது.
இத்தகைய சூழலில் இந்த வலை பதிவு ஏன் பதியப்படுகிறது என்றால், மறுபடியும் நம்மிடையே கடிதம் எழுதும் ஆர்வத்தை தூண்டிவிடுவதர்க்காகத்தான். நாம் நம் வார்த்தைகளை தாளில் எழுதும்பொழுது இருப்பதைவிட, அந்த கடிதத்தை பெற்ற நபர் நீண்ட நாட்களுக்குப்பிறகு அதனை எடுத்துப்படிக்கும்பொழுது அந்த கடிதம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தின் வீரியம் அதிகம்.
இதனை நாம் என்றேனும் கண்டிப்பாக உணர்ந்திருப்போம்.
அப்படிப்பட்டதொரு உணர்சிக்காலம் எவ்வளவு அருமையானது நண்பா!
அதை நாம் மீண்டும் உயிர்பிப்போமா?
உரிமைகளை பெறவும்
உதவினாய் கடிதமே!
எத்தனை கிளர்ச்சி?
எத்தனை மலர்ச்சி?
எத்துனை போர்கள்
உன்னால்
அதாகப்பட்டவற்றைஎல்லாம் விட ;
நீ உயிர்பித்த
உறவுகள் எத்தனை
உணர்தொமே இன்று!
No comments:
Post a Comment