Monday, July 27, 2009

நடுப்பட்டி வழியே ஒரு பயணம்! ஈரோடு - நடுப்பட்டி - குன்னத்தூர்

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நம்ம நண்பர்களை சந்திக்க நினைத்தது ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. ஒரு வாரத்தில் திட்டமிட்டு உடனடியாக எல்லோரும் சந்தித்தது மறக்க முடியாத தருணம். காலையில் நான், அய்யாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நேரடியாக புலவர் பாளையம் வந்தோம். அங்கு நாங்கள் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயவேல் கோவையிலிருந்து வந்தான். அங்கு நாங்கள் தங்கிய வீட்டு ஓனர் கறி சோறு சமைத்துப் போட்டது ரொம்ப சந்தோசமா இருந்தது. அப்படியே நடுப்பட்டி போய் நம்ம காலேஜையும் பார்த்துட்டு வந்தோம்.






























அடுத்து குன்னத்தூர் போகலாம்னு முடிவு பண்ணினோம். சிரிலும், நித்தியானந்தமும் எங்களுக்காக பெருமாநல்லூரில் காத்திருந்தார்கள். அவர்களை ஜெயவேல் காரில் அழைத்துக்கொண்டு குன்னத்தூருக்கு குன்னத்தூறான் யுவராஜோடு சென்றோம். அங்கு சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்து ஓய்வெடுத்தோம். ஏழு வருடத்திற்கு பிறகு பலரும் சந்தித்ததால் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தோம். சாயங்காலம் திருப்பூர் ரமேஷ் மாருதி வேனில் வந்திருந்தார். அவர் வேனில் செங்கர்பள்ளி தாபாவில் வயிறார சாப்பிட்டுவிட்டு ஈரோடு செல்ல திட்டமிட்டோம்.

அங்கே உள்ள நமது கல்லூரி தோழி நர்மதாவையும் சந்திக்க திட்டமிட்டு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அனைவரும் ஈரோடு சென்று நர்மதாவை சந்தித்தோம். பிறகு அனைவரும் அடிக்கடி இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து சந்திக்க வேண்டும் என முடிவு செய்து வருத்ததோடு விடைபெற்றோம்.
அன்புடன்,
கள்ளக்குறிச்சி ப்ரசன்னா வினோத்

(படங்களை பெரிதாக்க படங்களின் மேல் சொடுக்கவு
ம்)

1 comment:

karthic said...

really superb our friends.
is that nadupatti...
really chaged a lot.

cheers our friends to make a accompany like this.

I hope it will be continue.