Friday, April 16, 2010

மே 2 ஆம் தேதி வந்துருங்கப்பா

ஏற்கனவே சொன்னது போல, அடுத்ததொரு திருமண விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அனைவருக்கும் அறிமுகமான புன்னகை சிந்தும் முகத்துக்கு சொந்தக்காரனரான பாபா சலீம் மாலிக் வரும் மே 2ஆம் நாள் இல்லற வாழ்வில் இனிதே நுழைகிறார். 
ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம். அதனால் கலந்துகொள்வதில் எவ்வித தடையும் இருக்காது என எண்ணுகின்றேன். அது போல கோடைக்கு இதமான உலகின் தலை சிறந்த அருவிகளில் ஒன்றான குற்றாலத்திற்கு மிக அருகில் உள்ள ஊரான செங்கோட்டையில் வைத்து திருமணம் நடக்கிறது. எனவே காரணங்களை ஒதுக்கி மன மகிழ்வோடு மண மக்களை வாழ்த்த கலந்துகொள்வோம்.


திருமண நாள்: மே 2
இடம்: இந்திரா திருமண மண்டபம், செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்புக்கு:  sbs_malik@yahoo.co.in / s.malik@tasnee.com / 95979 45107

No comments: