Tuesday, September 7, 2010

தேர்தல் காலம்????

சற்றே.... நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்துக்களை பகிர்வதற்கு வந்திருக்கிறேன். கடந்த சில் மாதங்களாகவே திருமண செய்திகளுக்குள், நாம் சிக்குண்ட பிறகு எந்த நிகழ்வைப் பதியலாம் என்று சிந்திக்கும்பொழுது சற்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன்.  சில பல சிந்தனைகளுக்குப் பிறகு இவனால் படிக்கப்பட்ட, உணர்வுப்பூர்வமாக உண்மை என நம்பிய, நம்பும் செய்திகளைக் கொண்ட ஒரு தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். 

என்னடா ஒரு வலைத்தளத்திற்கு இவ்வளவு அறிமுகம் தேவையா? எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம்.  ஏனெனில் இது அரசியல் சம்பந்தப்பட்டது. கடந்த காலங்களில் நாம் அரசியல் குறித்த தகவல்களை இதில் வலையேற்ற்ற்றம் செய்ததில்லை. காரணம் நம்மில் பலரும், பல விதமான எண்ண, கொள்கை ஓட்டத்தில் இருக்கலாம்! இப்படியானதொரு சூழலில் ஒரு சார்பு அல்லது எதிர்ப்பு கருத்துக்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் மேலிட்டமைதான். 

பிறகு எதற்கு அரசியல்?

இது அரசியல் சம்பந்தப்பட்டதுதான் ஆனால் கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு சம்பந்தப்பட்டது அல்ல. நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமானது ஒரு புலனாய்வு ஊடகம். இன்றைய சூழலில் நாம் படிக்கும் ஒரு சாதாரண செய்தியானது நடக்க, எந்த அசாதாராமான சம்பவம் காரணம்?  என்பதை உணர கடமைப் பட்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட மறைமுக சம்பவங்களை 
நமக்குத் தருகிறது. முகப்பில் உள்ள படத்தைப் பார்த்து தீர்மானிக்க வேண்டாம் . படித்துப் பாருங்கள்.

நல்லவற்றை எடுத்துச் சொல்ல ஒவ்வொருவனுக்கும் கடமை உண்டு! என்ற எண்ணத்திலே இதனை உங்களோடு பகிர்ந்துள்ளேன். இக்கருத்துக்களில் மாற்றம் இருப்பின், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

அடர்மரங்களும் நன்னீருமில்லாமல் வருங்காலமில்லை! -  

இலா. தேவா

No comments: