Tuesday, July 1, 2008

மறக்க முடியுமா

27ஆம் நாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிமை மிகு நிகழ்வுகளையும், கடந்து வந்த பாதையின் துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்கியது. ஆறு வருடங்கள் கழித்து சந்திப்பதால் மிகவும் மகிழ்வோடு பலரையும் எதிர்பார்த்தோம் ஆனால் வந்திருந்த நண்பர்கள் அதனை மறக்கச்செய்தனர். அன்றைய தினம் சுதாகர், கிங்க்ஸ்டன், பொன்ராஜ், பங்கஜ், லிபின், பிரசன்னா & சிறில் ஆகியோர் சந்தித்தோம்.
நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளமுடியாத மதுரை கோசா பாக்கியராஜிடம் அனைவரும் அலைபேசியில் உரையாடினோம் மற்றும் எட்வின், பால்சுபிநேர், நிஞ்சக் கார்த்திக், கும்பகோணம் கார்த்தி ஆகியோரிடமும் நினைவுகளை பரிமாறிக்கொண்டோம். ஜான், கந்தசாமி, வசந்த், பிரகாஷ், ரவிசங்கர் போன்றவர்களுக்கு முயற்சி செய்தோம், தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து அவர்கள் வருந்தியதாக கேள்விப்பட்டு கவலைகொண்டோம்.
மீண்டும் இதைப்போன்று ஒரு நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அனைவரும் இதயத்தின் ஆழத்தில் இருன்ற்து கூறியது மறக்க முடியாதது.

No comments: