Monday, July 28, 2008

திரவியம் தேடும் நண்பர்கள்

நேற்று காலையில், "தமிழனால் சிறந்து விளங்கும்" சிங்கப்பூரை மேலும் சிறப்பாக்கும் நம் நண்பர்கள் தொடர்புகொண்டார்கள். விடுமுறையை கொண்டாட நண்பர்கள் அன்டன், கந்தசாமி, சுதாகர், ஜான், சந்தோஷ் ஆகியோர் கூடி களிப்படைந்திருக்கிறார்கள். அந்த மதி மயக்கும் வேளையில் என்னோடு அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த வலை தளம் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார்கள்! இது சிறப்படைவதே நண்பர்களால் தானே. கடல் கடந்தும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமா? புண்ணியமா? இல்லை நண்பர்களுக்குள் இருக்கும் பாசம் அல்லவா? பாசத்தின் விளை நிலம் தமிழ் நாடு என்றால்; அதை விளைவிப்பவர்கள் நாமல்லவா? நாமெல்லாம் சந்தித்து பத்து ஆண்டுகளும், பிரிந்து ஆறு ஆண்டுகளும் ஆகின்றன. அனைவரும் மீண்டும் ஒரு நாள் சந்திப்பது கூடுமா? எனும் சமயத்தில் சிறு சிறு வட்டமாக சென்னையிலும், ஹோசுரிலும், துபாயிலும், சிங்கப்பூரிலும் நண்பர்கள் இருப்பது கூடும் என நினைக்க வைக்கிறது.
சக நண்பர்களின் அலைபேசி எண்கள் கிடைக்காமல் பரிதவிப்பது எப்பொழுதும் நடக்கிறது. அந்த தொல்லைகளை நீக்க நமது மற்றொரு வலை தளமான http://www.eict99-2k2.blogspot.com/ ஐ க்ளிக் செய்யுங்கள்.

No comments: