Monday, March 1, 2010

அப்படியேதானிருக்கிறது

கடந்த வாரத்தில் நமது அறிமுகத்திற்கும், நட்பிற்கும் காரணமான நடுப்பட்டி வழியாக செல்ல நேர்ந்தது. நம்மில் பலருக்கும் நடுப்பட்டி என்றவுடன் முதலில் வெறுப்பும்(EICT) பிறகு மேட்டுக்கடை & நடுப்பட்டி பெட்டிக்கடையும் தான் ஞாபகத்திற்கு வரும்.  ஒரு காலத்தில் அதாவது 1999 - 2002 காலக்கட்டத்திற்கு நமது நினைவலைகளை திருப்பினோம் என்றால் நாம் இருந்த பகுதியினை சுற்றிலும் பொட்டல் காடும், சற்று தொலைவில் சோளக் கதிருமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக புலவர்பாளைய பகுதியினை நம்மில் பலரும் மறந்திருப்போம். நாம் படித்து வெளிவரும் காலக்கட்டத்தில் சாசூரி எனும் பொறியியல் கல்லூரி நடுப்பட்டி அருகே புலவர்பாளையத்தில் ஆரம்பிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரு இடத்தின் வளர்ச்சியானது அதன் அருகிலோ அல்லது அப்பகுதியிலோ நிலவும் சாதகமான காரணிகள் மற்றும் நிறுவனங்களை பொறுத்ததாக அமையும். அந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் அந்த பகுதியின் மாற்றங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றது. ஆம் ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட கடைகள் புலவர்பாளையத்தில் அமைந்து, நகரத்தின் பொருட்கள் யாவும் அப்பகுதி மக்களுக்கும், மாணாக்கருக்கும் கிடைக்கும் வண்ணம் அனைத்து விதமான கடைகளும் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் 25 ஆண்டுகளைக் கடந்த EICT நடுப்பட்டி?
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அது கோணலாக இருப்பது தெரியும். பேருந்தில் பயணிக்கும்போது எடுக்கப்பட்டதால் ஏதேச்சையாக அப்படித்தெரிந்தாலும், அந்த புகைப்படம் EICTயின் உண்மை நிலையை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைக்கு EICT ஆனது பொறியியல் கல்லூரியாக உயர்ந்து! இருந்தாலும், மூன்று பேருந்துகள் நிற்பது நம் கண்ணுக்கு தெரிந்தாலும் அங்கே உள்ள கட்டடங்களும் நடுப்பட்டியின் பொட்டல் காடும் நமக்கு இன்றும் உணர்த்துவது யாதெனில் இன்னும் நமது EICT அப்படியேதானிருக்கிறது என்பதே.

No comments: