தனி மனிதன் என்ற நிலையைத் தாண்டி, சமுதாயத்தின் மதிப்புமிக்க ஒரு அங்கத்தினராக மாற்றுவது திருமணம். அத்தகையதொரு புதியதொரு வாழ்க்கைப்பயணத்தில் மாறுபட்ட சூழ்நிலையில் அடியெடுத்து வைத்திருக்கும் இரு நண்பர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இரு குடும்பங்களிலும் சற்று பிடிவாதம், மனக்குழப்பங்கள், விருப்பமின்மை இருப்பினும் இரு பக்கங்களிலும் சில பல உறவினர்களும், நண்பர்களும் வந்து உடனிருந்து வாழ்த்திச்சென்றனர். இப்படிப்பட்ட கலப்புத் திருமணங்கள் வரவேற்க்கக்கூடியதாக இருப்பினும், மணமக்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கை தான் வந்து வாழ்த்தியோருக்கும், உறுதுணையாய் நின்றவர்களுக்கும் மிகுதியானதொரு நீண்ட மகிழ்வை அளிக்கும் என்பதை பிரசன்னா தம்பதியர் உணர்ந்து வாழவேண்டும்.

சில திருமணங்களைக் காணச் செல்லக்கூடிய பயணம் அலுப்பைத்தரக்கூடியதாக இருப்பினும், திருமண வீட்டில் உபசரிக்கும் விருந்தோம்பலானது பயணக்களைப்பை எல்லாம் மறக்கடித்து ஒரு பாசப்பினைப்பிற்குள் நம்மைக் கொண்டு சென்றுவிடும். அப்படிப்பட்டதானவொரு மன மகிழ்வை வெள்ளாங்கோயில் வெங்கடேஷ் திருமண வரவேற்பில் காண முடிந்தது. நண்பர்கள் பலரை அழைக்க மறந்ததது குறித்து சில நண்பர்கள் மன வருத்தமடைந்தனர். வெங்கடேசும் தனது நேரமின்மை மற்றும் பரபரப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருத்தப்பட்டான்.
பரவாயில்லை இனிமேல் நண்பர்கள் தங்களது திருமணத்திற்கு பிற நண்பர்களை அவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அழைப்பது ஒவ்வொருவரின் கடன் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
No comments:
Post a Comment