நண்பர்களே இந்த ஆண்டு அதிக அளவில் திருமணங்கள் இருக்கும் என எண்ணுகிறேன்.பல நண்பர்களிடம் விசாரித்ததில் பலருக்கும் இந்த வருடம் மண வாழ்வில் நுழையும் கால கட்டமாக இருக்கப்போகிறது என உணர்ந்து கொண்டேன். நல்லது, வயதும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா?. இதோ அந்த வரிசையில் நமது பாசத்திற்கும், நேசத்திற்குமுரிய நண்பன் வெள்ளாங்கோயில் வெங்கடேசுக்கு திருமணம். திருமண நாள் பிப்ரவரி 25. தேனி பிரசன்னாவிற்கும் இதே நாளில் தான் திருமணம்.
நண்பர்கள் இருவரின் திருமணங்களும் ஒரே நாளில் நடப்பதால் எந்த திருமணத்திற்கு போவது என குழப்பம் வேண்டாம்? 26ஆம் தேதி வெங்கடேஷ் திருமண வரவேற்பு வைத்துள்ளான்.
நண்பர்களின் திருமணங்கள் என்பது நாம் ஒன்றாக சந்திக்க வரும் வாய்ப்புகள். ஆனால் பலருக்கும் வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. வேலை, விடுமுறை, செலவுகள் மற்றும் சோம்பேறித்தனம் என சில தடங்கல்கள் நாம் போகலாம் என நினைத்தாலும் திருமணங்களில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
எது எப்படி இருப்பினும் அழைப்பது கடமை. ஏனெனில் மாப்ள சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிகிட்டியே? என யாரும் கேட்டுவிடக்கூடாது அல்லவா. வெள்ளாங்கோயில் பாசத்துடன் அழைத்துள்ளான், கலந்துகொள்ள முயலுவோம்.
தொடர்புகொள்ள: 9865635948 / venki_pct@yahoo.co.in
No comments:
Post a Comment