Saturday, January 31, 2009

கல்யாணக் காலம்

இந்த வருடம், நிச்சயம் நமது நண்பர்கள் அடிக்கடி சந்திக்கும் தருணங்கள் அதிகமாக இருக்கும் என நம்புகின்றேன். ஏனெனில் பலரது மண வாழ்க்கை இந்த வருடம் தொடங்கக்கூடும் என்ற நண்பர்களின் தகவல்கள் அதனை உரூதிப்பதுத்துகிந்ரது. ஏற்கனவே திலீப்பின் திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது. அடுத்ததாக நம்மால் பாசத்துடன் "கோழி" என்று அழைக்கப்பட்ட ஜெகதீசின் திருமணம் பெப்ருவரி மாதம் 22 ஆம் நாள் நடைபெற இருக்கிறது. இன்னும் பிரசன்னா, சுதாகர், அந்தோணி தீப ராஜா, பங்கஜ் குமார், கந்தசாமி, பாபா சலீம் மாலிக்,.... என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நண்பர்களின் திருமணத்தை காண ஒவ்வொருவரும் ஆவலுடன் காத்திருக்கின்றோம். எது செய்தாலும் அனைவருக்கும் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்பதை இந்த தருணத்தில் அனைவருக்கும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதோ ஜெகதீஷின் அழைப்பு மடல்:
நண்பர்களே எப்படி இருக்கின்றீர்கள்? அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் தற்சமயம் அரேபிய தேசத்தில் இருப்பதால் அனைவரையும் தொடர்புகொண்டு பேச இயலவில்லை. எனது திருமணத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். உங்களை காண ஆவலாக உள்ளேன். எனது திருமணம் 22 ஆம் தேதி நடக்கிறது. நான் 15 ஆம் தேதி தான் தமிழகம் வருகின்றேன். நாட்கள் குறைவாக உள்ளதால், அனைவரும் வரவேண்டும் என இதன் மூலம் அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் தங்குவதற்கு குளிரூட்டப்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு உங்களை அழைத்து வரவும், கவனிக்க வேண்டிய பொறுப்பையும் எனது பங்காளியும், பாசத்திற்குரிய நண்பனுமான பங்கஜ் குமாரிடம் ஒப்படைத்துள்ளேன். எனவே கண்டிப்பாக அனைவரும் வந்து வாழ்த்த அன்போடு அழைக்கின்றேன்.
உங்கள் வரவை எதிர் நோக்கி,
ஜெகதீஷ்

திருமண நாள் : 22.02.2009
இடம் : மரியகிரி, களியக்காவிளை, நாகர்கோவில்.


தொடர்புகொள்ளுங்கள் :
ஜெகதீஷ் -
9600279941
பங்கஜ் குமார் - 9940092546
மின்னஞ்சல்: jag6377@gmail.com

Wednesday, January 21, 2009

புதிய பார்வை

இந்த வலைப்பூவை நமது கல்லூரிக்கால நண்பர்கள் ஒருவர் மற்றொருவரைப்பற்றி அறிந்து கொள்ளவும், நமது இனிமையான நினைவுகளைப்பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றோம். ஆரம்பத்தில் இதனை உபயோகப்படுத்துபவர்கள் குறைவா இருந்தாலும், இன்றைய சூழலில் மனநிறைவு தரும் வகையில் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்ப்பட்ட நமது நண்பர்களால் பார்வையிடப்பட்டு, தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றது.

இதில் தொடர்ந்து நானே எழுதி வருகின்றேன், இந்த நிலை மாற வேண்டும் என்பது எனது விருப்பம். இணையதளத்தை பயன்படுத்தும் நண்பர்கள் அனைவருமே தங்கள் வேலை, பயணம், நண்பர்களைப்பற்றிய தகவல்கள் என தங்கள் உள்ளத்தின் கருத்துக்களை வெளிப்படுத்த முன் வர வேண்டும்.

கடந்த நாட்களில் வெளிவந்த அரசியல் சார்புடைய தகவல்களை இனி வரும் நாட்களில் தவிர்க்கலாம் என எண்ணுகின்றேன். ஏனெனில் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுடையவர்களாக இருப்பார்கள், இத்தருணத்தில் அரசியல் கருத்துக்கள் நமது நண்பர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த வலைப்பூ நமது நண்பர்களுக்கானது மட்டுமே.

எனது நீண்ட கால சிந்தனையை சிந்த ஒரு வாய்ப்பாக எண்ணி www.wondereagle.blogspot.com என்ற வலைப்பூவை தொடங்கி இருக்கின்றேன். அதில் எனது எண்ணங்களை தொடர்ந்து வாரமிருமுறை பதியலாம் என முடிவேடுத்துள்ளேன். எனவே அந்த வலைப்பூவையும் தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளேன். அதோடு தமிழ் கூறும் சமுதாயத்திற்கும் அந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துங்கள்.

பார்வையிடுங்கள் www.wondereagle.blogspot.com

Saturday, January 17, 2009

திலீப்பிற்கு திருமணம்!

அன்புள்ள நண்பர்களே!
மீண்டும் ஒரு காதல் கல்யாணத்தை காண திலீப்பால்(Chemical) அழைக்கப்படுகிறீர்கள். பெரும்பாலும் காதல் சில ஆண்டுகள் நீண்டிருந்தாலும், திருமணம் குறுகிய இடைவெளியில் நடப்பது பெற்றோர் மனம் மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்திலா அல்லது ஆனது ஆயிற்று தொல்லை ஒழிந்தால் சரி என்ற கவலையிலா என்பது காதல் திருமணம் புரிந்தோரிடம்தான் கேட்க வேண்டும். எது எப்படி இருப்பினும் சரி சாதி & மதம் கடந்து திருமணம் புரிவது சமுதாய வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் காரணியாகும். அப்படிப்பட்ட திருமணம் புரிவோர் இருமனமும் கோணாமல் இறுதி வரை வாழ்வது ஒன்றுதான் பெற்றோருக்கும் நடத்தி வைக்கும் அன்பர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும்.

நமது பாசத்திற்குரிய நண்பன் திலீப் தனது திருமணத்திற்கு நமது நண்பர்கள் அனைவரையும் இந்த வலைத்தளம் மூலமாக அன்போடு அழைக்கிறான்.

நாட்கள் மிகக்குறைவு எனினும் முடிந்த வரை அனைவரும் தவறாது கலந்து கொள்ள முயற்சி எடுங்கள். ஏனெனில் நண்பர்களின் திருமணங்கள் தான் நாம் சந்தித்து கடந்த காலங்களின் மகிழ்ச்சியையும், நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. உள்ளூரில் இருப்பவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். வெளியூரில் இருப்பவர்கள் வாழ்த்துச்செய்தி அனுப்ப மறவாதீர்கள்.

திருமண நாள் : 21.01.2009
இடம் : பட்டி வீரன்பட்டி, வத்தலகுண்டு

வரவேற்பு : 24.01.09
சென்னை நியூ வுட்லண்ட்ஸ், ஆர் கே சாலை, மாலை 6 மணிக்கு மேல்

தொடர்புகொள்ளுங்கள் :
திலீப்- 9840095945

மின்னஞ்சல்: dilipinchn@gmail.com

Wednesday, January 14, 2009

தமிழனுக்கு முதல் நாள்!

இனியதொரு நாளில் இந்த மடலை எழுதுவதில் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்த்திருநாளாம் பொங்கல் பெருநாளாம் இன்று தமிழ்ப் புத்தாண்டையும் கொண்டாடுகின்றோம். பலருக்கும் குழப்பம் இன்று தமிழ்ப்புத்தாண்டா?! என்று.

தமிழ்ப்புத்தாண்டு தமிழனின் திருநாள் அன்று தமிழனின் முதல் மாதத்தில் முதல் நாளில் கொடாடப்படவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. தை மாதம் தானே தமிழனின் முதல் மாதம்; அப்படியிருக்கையில் இது வரை ஏன் சித்திரையில் கொண்டாடினோம் தமிழனின் புத்தாண்டை?

எல்லாம் காலத்தின் கோலம், அரசியல் மற்றும் ஆரிய அடிவருடிகளின் கைங்கரியம்தான் அது. தை முதல் நாள்தான் தமிழனின் முதல் நாள் என்று பல நூறாண்டுகளாக அறிஞர் பெருமக்கள் கூறி வந்ததும் மற்றும் 1920 களில் தமிழ் அறிஞர் பலர் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடி இனி வரும் காலம் தைத்திங்களில் முதல் நாள் தான் தமிழனின் புத்தாண்டு என அறிவித்து கொண்டாடி வந்ததும், அந்த நீடியதொரு ஏமாற்றுக்காலத்தின் வரலாறும் அதை மாற்றியமிக்க உண்மையான தமிழர்கள் போராடியதும், பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து சுகம் கண்ட தமிழர் தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்கு சென்ற வருடம் தான் தெரிய வந்திருப்பது ஏன் என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நேரத்தில், தமிழ்ப்புத்தாண்டை மாற்றியமைக்க இவர் யார் என்று பழித்துரைப்பது மூடத்தனமாகும்.

தமிழன் தன்னுடைய நாளில் தனது புத்தாண்டை நீண்ட நெடுங்காலம் கழித்து கொண்டாடும் அதே தருணத்தில் ஈழத்தில் சக தமிழன் துன்பத்திலும, துயரத்திலும், மனம் வெதும்பியும், உயிர் பயத்திலும் வாழ்வது, இப்புத்தாண்டை கவலைக்குரியதாக மாற்றியமைத்துள்ளது.