Wednesday, January 14, 2009

தமிழனுக்கு முதல் நாள்!

இனியதொரு நாளில் இந்த மடலை எழுதுவதில் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்த்திருநாளாம் பொங்கல் பெருநாளாம் இன்று தமிழ்ப் புத்தாண்டையும் கொண்டாடுகின்றோம். பலருக்கும் குழப்பம் இன்று தமிழ்ப்புத்தாண்டா?! என்று.

தமிழ்ப்புத்தாண்டு தமிழனின் திருநாள் அன்று தமிழனின் முதல் மாதத்தில் முதல் நாளில் கொடாடப்படவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. தை மாதம் தானே தமிழனின் முதல் மாதம்; அப்படியிருக்கையில் இது வரை ஏன் சித்திரையில் கொண்டாடினோம் தமிழனின் புத்தாண்டை?

எல்லாம் காலத்தின் கோலம், அரசியல் மற்றும் ஆரிய அடிவருடிகளின் கைங்கரியம்தான் அது. தை முதல் நாள்தான் தமிழனின் முதல் நாள் என்று பல நூறாண்டுகளாக அறிஞர் பெருமக்கள் கூறி வந்ததும் மற்றும் 1920 களில் தமிழ் அறிஞர் பலர் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடி இனி வரும் காலம் தைத்திங்களில் முதல் நாள் தான் தமிழனின் புத்தாண்டு என அறிவித்து கொண்டாடி வந்ததும், அந்த நீடியதொரு ஏமாற்றுக்காலத்தின் வரலாறும் அதை மாற்றியமிக்க உண்மையான தமிழர்கள் போராடியதும், பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து சுகம் கண்ட தமிழர் தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்கு சென்ற வருடம் தான் தெரிய வந்திருப்பது ஏன் என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நேரத்தில், தமிழ்ப்புத்தாண்டை மாற்றியமைக்க இவர் யார் என்று பழித்துரைப்பது மூடத்தனமாகும்.

தமிழன் தன்னுடைய நாளில் தனது புத்தாண்டை நீண்ட நெடுங்காலம் கழித்து கொண்டாடும் அதே தருணத்தில் ஈழத்தில் சக தமிழன் துன்பத்திலும, துயரத்திலும், மனம் வெதும்பியும், உயிர் பயத்திலும் வாழ்வது, இப்புத்தாண்டை கவலைக்குரியதாக மாற்றியமைத்துள்ளது.

No comments: