Wednesday, January 21, 2009

புதிய பார்வை

இந்த வலைப்பூவை நமது கல்லூரிக்கால நண்பர்கள் ஒருவர் மற்றொருவரைப்பற்றி அறிந்து கொள்ளவும், நமது இனிமையான நினைவுகளைப்பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றோம். ஆரம்பத்தில் இதனை உபயோகப்படுத்துபவர்கள் குறைவா இருந்தாலும், இன்றைய சூழலில் மனநிறைவு தரும் வகையில் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்ப்பட்ட நமது நண்பர்களால் பார்வையிடப்பட்டு, தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றது.

இதில் தொடர்ந்து நானே எழுதி வருகின்றேன், இந்த நிலை மாற வேண்டும் என்பது எனது விருப்பம். இணையதளத்தை பயன்படுத்தும் நண்பர்கள் அனைவருமே தங்கள் வேலை, பயணம், நண்பர்களைப்பற்றிய தகவல்கள் என தங்கள் உள்ளத்தின் கருத்துக்களை வெளிப்படுத்த முன் வர வேண்டும்.

கடந்த நாட்களில் வெளிவந்த அரசியல் சார்புடைய தகவல்களை இனி வரும் நாட்களில் தவிர்க்கலாம் என எண்ணுகின்றேன். ஏனெனில் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுடையவர்களாக இருப்பார்கள், இத்தருணத்தில் அரசியல் கருத்துக்கள் நமது நண்பர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்ப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த வலைப்பூ நமது நண்பர்களுக்கானது மட்டுமே.

எனது நீண்ட கால சிந்தனையை சிந்த ஒரு வாய்ப்பாக எண்ணி www.wondereagle.blogspot.com என்ற வலைப்பூவை தொடங்கி இருக்கின்றேன். அதில் எனது எண்ணங்களை தொடர்ந்து வாரமிருமுறை பதியலாம் என முடிவேடுத்துள்ளேன். எனவே அந்த வலைப்பூவையும் தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளேன். அதோடு தமிழ் கூறும் சமுதாயத்திற்கும் அந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துங்கள்.

பார்வையிடுங்கள் www.wondereagle.blogspot.com

No comments: