Saturday, February 27, 2010

புதியதொரு வாழ்க்கைப்பயணம்

 தனி மனிதன் என்ற நிலையைத் தாண்டி, சமுதாயத்தின் மதிப்புமிக்க ஒரு அங்கத்தினராக மாற்றுவது திருமணம். அத்தகையதொரு புதியதொரு வாழ்க்கைப்பயணத்தில் மாறுபட்ட சூழ்நிலையில் அடியெடுத்து வைத்திருக்கும் இரு நண்பர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள். 
இரு குடும்பங்களிலும் சற்று பிடிவாதம், மனக்குழப்பங்கள், விருப்பமின்மை  இருப்பினும் இரு பக்கங்களிலும் சில பல உறவினர்களும், நண்பர்களும் வந்து உடனிருந்து வாழ்த்திச்சென்றனர். இப்படிப்பட்ட கலப்புத் திருமணங்கள் வரவேற்க்கக்கூடியதாக இருப்பினும், மணமக்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கை தான் வந்து வாழ்த்தியோருக்கும், உறுதுணையாய் நின்றவர்களுக்கும் மிகுதியானதொரு நீண்ட மகிழ்வை அளிக்கும் என்பதை பிரசன்னா தம்பதியர் உணர்ந்து வாழவேண்டும். 

சில திருமணங்களைக் காணச் செல்லக்கூடிய பயணம் அலுப்பைத்தரக்கூடியதாக இருப்பினும், திருமண வீட்டில் உபசரிக்கும் விருந்தோம்பலானது பயணக்களைப்பை எல்லாம் மறக்கடித்து ஒரு பாசப்பினைப்பிற்குள் நம்மைக் கொண்டு சென்றுவிடும். அப்படிப்பட்டதானவொரு மன மகிழ்வை வெள்ளாங்கோயில் வெங்கடேஷ் திருமண வரவேற்பில் காண முடிந்தது. நண்பர்கள் பலரை அழைக்க மறந்ததது குறித்து  சில நண்பர்கள் மன வருத்தமடைந்தனர். வெங்கடேசும் தனது நேரமின்மை மற்றும் பரபரப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருத்தப்பட்டான். 

பரவாயில்லை இனிமேல் நண்பர்கள் தங்களது திருமணத்திற்கு பிற நண்பர்களை அவர்கள் வந்தாலும், வராவிட்டாலும்  அழைப்பது ஒவ்வொருவரின் கடன் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

Thursday, February 25, 2010

வாழ்த்துக்கள்!!

என் அன்பு நண்பர்கள் பிரசன்னா மற்றும் வேங்கடேஷ்க்கும் இன்று மணவிழா!!!
அங்கு இரு மனமும் திருமணத்தில் முடிந்து இத்தினத்தில் இருந்து நல்வாழ்கையை தொடங்குகின்றனர்.

திருமணத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தூரத்தால் நாங்கள் பிரிந்திருந்தாலும், உள்ளத்தில் திருமணத்தில் இருந்ததாய் எண்ணி அவர்களை வாழ்த்துகின்றோம்.


நண்பர்கள் அவரவர் தம் மனைவியுடன் சகல செல்வங்களும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்.


இப்படிக்கு,


நண்பர்கள்.

Saturday, February 20, 2010

வெள்ளாங்கோயில் வெங்கடேசுக்கு கல்யாணம்

நண்பர்களே இந்த ஆண்டு அதிக அளவில் திருமணங்கள் இருக்கும் என எண்ணுகிறேன்.பல நண்பர்களிடம் விசாரித்ததில் பலருக்கும் இந்த வருடம் மண வாழ்வில் நுழையும் கால கட்டமாக இருக்கப்போகிறது என உணர்ந்து கொண்டேன். நல்லது, வயதும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா?. இதோ அந்த வரிசையில்  நமது பாசத்திற்கும், நேசத்திற்குமுரிய நண்பன் வெள்ளாங்கோயில் வெங்கடேசுக்கு திருமணம். திருமண நாள் பிப்ரவரி 25. தேனி பிரசன்னாவிற்கும் இதே நாளில் தான் திருமணம்.
நண்பர்கள் இருவரின் திருமணங்களும் ஒரே நாளில் நடப்பதால் எந்த திருமணத்திற்கு போவது என குழப்பம் வேண்டாம்? 26ஆம் தேதி வெங்கடேஷ் திருமண வரவேற்பு வைத்துள்ளான். 
         நண்பர்களின் திருமணங்கள் என்பது நாம் ஒன்றாக சந்திக்க வரும் வாய்ப்புகள். ஆனால் பலருக்கும் வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. வேலை, விடுமுறை, செலவுகள் மற்றும் சோம்பேறித்தனம் என சில தடங்கல்கள் நாம் போகலாம் என நினைத்தாலும் திருமணங்களில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்து விடுகின்றன என்பதுதான் உண்மை. 

எது எப்படி இருப்பினும் அழைப்பது கடமை. ஏனெனில் மாப்ள சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிகிட்டியே? என யாரும் கேட்டுவிடக்கூடாது அல்லவா. வெள்ளாங்கோயில் பாசத்துடன் அழைத்துள்ளான், கலந்துகொள்ள முயலுவோம். 

தொடர்புகொள்ள: 9865635948 / venki_pct@yahoo.co.in

Tuesday, February 9, 2010

அணுகுதல்

அது என்ன அணுகுதல்  தலைப்புல இருக்குனு நினைக்கிறயா?

அணுகுதல்னா நிறைய எழுதலாம் தான் ஆனா நான் எழுத போறது அது இல்ல மச்சி நமக்குள்ள இருக்குற நட்பின் அனுகுமுறை பத்தி...அதுல என்ன இருக்குதான யோசிக்கிற

நான் எதுவுமே எழுத போறது இல்ல, "நீ" தான் எழுதனும்.

நான் நினைக்குறது ஒன்னே ஒன்னு தான், எப்படி நமக்குள்ள இந்த இடைவெளியை குறைக்கிறது தான்...என்ன தான் சிரில் இந்த இடைவெளி குறைக்க சில படிகள் முன்னேடுதாலும் ஆங்காங்கே தொய்வு இருப்பதாக என் எண்ணம்.

ஏன்னு யோசிச்சா சில காரணம் தோணுச்சு

1.இணையம் (INTERNET)
2.பகிர்வதற்க்கு ஒன்னும் இல்லாதது போன்ற ஒரு மாய தோற்றம்
   (NOTHING TO BE SHARE WITH OURSELVES)
3. முன்னிருத்தாமை அல்லது வட்டம் இல்லாமை.
4.தயக்கம் (SHYNESS)
5.கடந்த காலங்களில் தேங்கி நிற்பது.

இதையும் தாண்டி உங்களுக்கு நிறைய தோணும், இல்ல மாற்றுக் கருத்து இருக்கும். ஆகவே, தயவுசெய்து இதில் பதிவு செய்யவும்.

Monday, February 1, 2010

பிரசன்னா அனுப்பும் மண ஓலை!!!

பிரசன்னா என்றவுடன், எந்த பிரசன்னா? என்ற குழப்பம் வருவது தவிர்க்க இயலாதது. ஏனெனில் நம்மோடு படித்தவர்களில் மற்ற எந்த பெயரையும் விட இந்த பெயரில் தான் மூன்று நபர்கள் படித்தனர்.
மாறி வரும் கால, கலாச்சார  நடைமுறைகளில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றது. நமது சமுதாய வளர்ச்சிக்கு இத்தகைய காதல் கலியாணங்கள் அவசியமானதுமாக இருக்கிறது. சாதிகள் மறந்து இரு மனங்கள் இணையும்போது, இரு குடும்பங்கள் உறவுகளாகிறது. இத்தகைய குடும்பங்களும், அவர் தம் உறவுகளும் வருங்கால சந்ததியினருக்கு சாதிகளற்ற மனப்பாங்கை ஊட்டி வளர்ப்பதில் முன்னணி வகிக்கின்றது.

 நான் மேற்கூறிய காரணங்கள் எதற்காக என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆம் மற்றுமொரு காதல் திருமணத்தை வாழ்த்த நாம் அழைக்கப்படுகிறோம். அழைப்பவர் நமது பாசத்திற்குரிய தேனி பிரசன்னா. வரும் 25 ஆம் நாள் வியாழக்கிழமையன்று பழனியில் வைத்து நடைபெற இருக்கின்றது. நண்பர்கள் அனைவரையும் நண்பன் பிரசன்னா அன்போடு அழைக்கின்றார்.

தொடர்பு கொள்ள: பிரசன்னா
97901 57650