Tuesday, December 21, 2010
Saturday, December 4, 2010
எட்வின் நாகர்கோவிலுக்கு அழைக்கிறார்...............
அன்புமிக்க நண்பர்களே,
இவ் (கல்யாண) வருடத்தின் திசம்பர் 17 ஆம் நாள், நமது பாசத்திற்குறிய நாஞ்சில் நாட்டு நண்பன் எட்வின் ஜெபசிங், ஜெனிலா எனும் மங்கையின் கரம் பற்றுகிறார். அம்மகிழ்வான தருணத்திலே நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
குமரிக் கரையோரமிருந்து நமக்கு வரும் (அனேகமாக) முதல் திருமண அழைப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.
எனவே தவறாது கலந்து கொள்ள விழைவோம்.

இடம்: மருதூர் குறிச்சி, மார்த்தாண்டம் சாலை, கன்னியாகுமரி மாவட்டம்.
மின்னஞ்சல்: edwinjosephr@gmail.com தொடர்புக்கு: 96291 54838
மின்னஞ்சல்: edwinjosephr@gmail.com தொடர்புக்கு: 96291 54838
Tuesday, November 30, 2010
Welcome to reception
Dear friend,
I welcome you to sengottai for my reception those who are unable to attend the marriage. Those who are attended also i welcome for this function. If you come a day a before it is more warmth to enjoy the situation and climate here. i will arrange for taking rest and enjoy the day with friends.
i am expecting your presence.
by,
your friendly,
K.K

Monday, November 29, 2010
நண்பா உனக்கு ஒரு(நல்ல) சேதி....
என் அருயிர் நண்பர்களே,
உனக்கு ஒரு நல்ல சேதி...கார்த்திக்(நின்சா, அப்படி தானே சிரில்) ஆகிய நான் வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் ஊமையாக போகிறேன்...ஏற்கனவே நமது சில நண்பர்கள் இப்படி ஆகி விட்டாலும் என்னுடைய அசையால் சே...ஆசையால் இன்னிலையை எடுத்திருக்கிறேன்(ஆசை தான் அவ்வளத்துக்கும் காரணம் புத்தர் சரி தான் தலிவரேரர...). ஆகவே தயவு செய்து நீங்க வந்து இவ்விழாவை(விழா அழைப்பிதழ் கிழே) சிறப்பித்து....உங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்...
ஆகவே என் நண்பர்களே உங்கள் நல்வரவை விரும்பும்....
k.k
பி.கு : மத்த பார்ட்டி புதனன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(படத்தை பெரிதாக படத்தின் மீது க்ளிக் செய்யவும்)
ஆகவே என் நண்பர்களே உங்கள் நல்வரவை விரும்பும்....
k.k
பி.கு : மத்த பார்ட்டி புதனன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Monday, November 8, 2010
Wednesday, October 20, 2010
"KPN" சுரேசின் திருமண அழைப்பு
Dear Friends,
2010 In Salem. Please find the enclosed invitation card for the details of venue and time. It would be really great to have your presence on this occasion. My contact number 08144444777(Tamil Nadu) and 9980902222 (Bangalore)
No Excuse.
Hope every will come in advance to make my function more joyful and unforgettable event in our life.
Your’s
Suresh.K
மண நாள் : 31 - 10 - 2010 இடம்: சேலம் மண்டபம்: பொன்னா கவுண்டர் திருமண மண்டபம், கொண்டலம் பட்டி நெடுஞ்சாலை அருகே. நேரம் : 11 AM - 2 PM
மண நாள் : 31 - 10 - 2010 இடம்: சேலம் மண்டபம்: பொன்னா கவுண்டர் திருமண மண்டபம், கொண்டலம் பட்டி நெடுஞ்சாலை அருகே. நேரம் : 11 AM - 2 PM
Tuesday, September 7, 2010
தேர்தல் காலம்????
சற்றே.... நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்துக்களை பகிர்வதற்கு வந்திருக்கிறேன். கடந்த சில் மாதங்களாகவே திருமண செய்திகளுக்குள், நாம் சிக்குண்ட பிறகு எந்த நிகழ்வைப் பதியலாம் என்று சிந்திக்கும்பொழுது சற்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். சில பல சிந்தனைகளுக்குப் பிறகு இவனால் படிக்கப்பட்ட, உணர்வுப்பூர்வமாக உண்மை என நம்பிய, நம்பும் செய்திகளைக் கொண்ட ஒரு தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
என்னடா ஒரு வலைத்தளத்திற்கு இவ்வளவு அறிமுகம் தேவையா? எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம். ஏனெனில் இது அரசியல் சம்பந்தப்பட்டது. கடந்த காலங்களில் நாம் அரசியல் குறித்த தகவல்களை இதில் வலையேற்ற்ற்றம் செய்ததில்லை. காரணம் நம்மில் பலரும், பல விதமான எண்ண, கொள்கை ஓட்டத்தில் இருக்கலாம்! இப்படியானதொரு சூழலில் ஒரு சார்பு அல்லது எதிர்ப்பு கருத்துக்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் மேலிட்டமைதான்.
பிறகு எதற்கு அரசியல்?
இது அரசியல் சம்பந்தப்பட்டதுதான் ஆனால் கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு சம்பந்தப்பட்டது அல்ல. நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமானது ஒரு புலனாய்வு ஊடகம். இன்றைய சூழலில் நாம் படிக்கும் ஒரு சாதாரண செய்தியானது நடக்க, எந்த அசாதாராமான சம்பவம் காரணம்? என்பதை உணர கடமைப் பட்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட மறைமுக சம்பவங்களை
நமக்குத் தருகிறது. முகப்பில் உள்ள படத்தைப் பார்த்து தீர்மானிக்க வேண்டாம் . படித்துப் பாருங்கள்.
நல்லவற்றை எடுத்துச் சொல்ல ஒவ்வொருவனுக்கும் கடமை உண்டு! என்ற எண்ணத்திலே இதனை உங்களோடு பகிர்ந்துள்ளேன். இக்கருத்துக்களில் மாற்றம் இருப்பின், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நல்லவற்றை எடுத்துச் சொல்ல ஒவ்வொருவனுக்கும் கடமை உண்டு! என்ற எண்ணத்திலே இதனை உங்களோடு பகிர்ந்துள்ளேன். இக்கருத்துக்களில் மாற்றம் இருப்பின், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
இலா. தேவா
Thursday, August 5, 2010
மரண செய்தி
நம்முடைய நண்பன் அப்புச்சி வினோத்தின் தந்தையார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அகால மரணமடைந்து விட்டார். பெற்றோரை பிரிந்து வாடும் நம்முடைய நண்பன் வினோத் குமாருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் .....
மேலும் அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
மேலும் அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வருத்தத்துடன்,
ஜகதீஷ்
Tuesday, June 22, 2010
Tuesday, June 8, 2010
பாசத்திற்குறிய நண்பர்களுக்கு
பாசத்திற்குறிய நண்பர்களுக்கு,
கடந்த மாதத்தில் இடைவிடாது நடந்த திருமணங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு மகிழ்வான திருமண நிகழ்விற்கு நம்மை தூத்துக்குடிக்கு வரவேற்கிறார் நமது பாசத்திற்குரிய கந்தசாமி. தூரங்களைப் பாராமல், பலரையும் நேரில் வந்து அழைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாமும் தவறாது கலந்துகொண்டு, மணமக்களை மன மகிழ்வோடு வாழ்த்துவோம் வாருங்கள்!
நாமும் தவறாது கலந்துகொண்டு, மணமக்களை மன மகிழ்வோடு வாழ்த்துவோம் வாருங்கள்!
இடம்: மரியா மஹால், முத்தையாபுரம், திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி.
தொடர்புக்கு: 91591 92722 / 99949 79813
Sunday, June 6, 2010
Friends
எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள், எட்டு மாதம் கழித்து இம்மாதம் தான் துபாய்க்கு மீண்டு(ம்) வந்துள்ளேன் நண்பர்களே. அனைவரும் நலமாக இருப்பீர்கள், புது வாழ்க்கைக்கு சென்ற புது மணத்தம்பதியருக்கும் வாழ்த்துகள். மீண்டும் இணைவோம்.
Tuesday, June 1, 2010
அனைத்து நண்பர்களுக்கு,
இல்லற வாழ்வில் புகுந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். எனது வேலை பளுவின் காரணமாக என்னால் இணைய தளத்தை திறந்து கூட பார்க்க முடியவில்லை அதனால் வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியவில்லை, அதனால் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் .
எல்லோரும் பதினாறும் பெற்று நிடூழி வாழ இந்த நண்பனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
எல்லோரும் பதினாறும் பெற்று நிடூழி வாழ இந்த நண்பனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
Wednesday, May 26, 2010
Friday, May 21, 2010
Friends Photo
Dear Friends,
Here i uploaded or added the photos which was taken in Malik marriage.Sry actually i upload it as a X-large picture but it hide our cyril. so changed in large size,i hope you may seen all of them. :-)

Thursday, May 20, 2010
வர்ற 24 ஆம் தேதி தம்பிக்கு கல்யாணம்
நம்ம வெப்சயிட்ட தொறந்தா ஒரே கல்யாண இன்விட்டேசனாத்தான் இருக்கு. இந்த வருசம் அந்த கல்யாணத்துக்கு போறதா இந்த கல்யாணத்துக்கு போறதானு உங்களுக்கு ஒரே குழப்பமா இருந்துருக்கும். இப்ப எந்த குழப்பமும் இல்லாம நான் சொல்றத கேளுங்க.
வர்ற 24 ஆம் தேதி தம்பிக்கு அதான் எனக்கு கல்யாணம். ஒருத்தர் விடாம எல்லோரும் 23 ஆம் தேதியே கள்ளக்குறிச்சிக்கு வந்துரனும். யோசிச்சிட்டு இருக்கேன், வர முடியலனு ஒருத்தனும் சொல்லக் கூடாது. தம்பி குணம் தெரியும்லா. நம்ம வீட்டுக் கல்யாணம், நாம எல்லாரும் கலந்துகிடனும்னு நினைச்சு வந்துருங்க.

இப்படிக்கு,
கள்ளக்குறிச்சி பிரசன்னா
Thursday, May 13, 2010
திருப்பூர் ரமேஸ்குமார் தனது........

அனைவருக்கும் அறிமுகமானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான திருப்பூர் ரமேஸ்குமார் தனது திருமண வரவேற்பிற்கு நண்பர்கள் அனைவரையும் ஆவலோடு அழைக்கின்றார். திருப்பூர் ரமேஷ் குமார் தனது துணைவியின் கரம் பற்றி உங்கள் வாழ்த்துக்களையும், வருகையையும் எதிர்பார்க்கிறார்.
திருமண வரவேற்பு : மே 28
இடம்: உமியா மகால், பாளையக்காடு. (திருப்பூர் - ஊத்துக்குளி சாலை)
நேரம்: பகல் 11.00 முதல் 3.00 வரை தொடர்புக்கு: 9843160506
Tuesday, May 11, 2010
மதுரை அரவிந்த் அனுப்பும் மண ஓலை

மண நாள் : மே 27
இடம்: அண்ணாமலையார் திருமண மண்டபம், கீழையூர்.
(மதுரை - காரைக்குடி சாலையில் உள்ளது)
தொடர்புக்கு: 9894101101
Friday, April 16, 2010
மே 2 ஆம் தேதி வந்துருங்கப்பா
ஏற்கனவே சொன்னது போல, அடுத்ததொரு திருமண விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அனைவருக்கும் அறிமுகமான புன்னகை சிந்தும் முகத்துக்கு சொந்தக்காரனரான பாபா சலீம் மாலிக் வரும் மே 2ஆம் நாள் இல்லற வாழ்வில் இனிதே நுழைகிறார்.
ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம். அதனால் கலந்துகொள்வதில் எவ்வித தடையும் இருக்காது என எண்ணுகின்றேன். அது போல கோடைக்கு இதமான உலகின் தலை சிறந்த அருவிகளில் ஒன்றான குற்றாலத்திற்கு மிக அருகில் உள்ள ஊரான செங்கோட்டையில் வைத்து திருமணம் நடக்கிறது. எனவே காரணங்களை ஒதுக்கி மன மகிழ்வோடு மண மக்களை வாழ்த்த கலந்துகொள்வோம்.
திருமண நாள்: மே 2
இடம்: இந்திரா திருமண மண்டபம், செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்புக்கு: sbs_malik@yahoo.co.in / s.malik@tasnee.com / 95979 45107
Wednesday, April 14, 2010
சித்திரை மலர்ந்தது நமக்காக
சித்திரை பிறப்பு நல்வாழ்த்துக்கள்!!!
ஜகதீஷ் குமார்
ஜகதீஷ் குமார்
Sunday, April 4, 2010
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
நண்பர்கள் பிரசன்னா ,தங்கராஜ் ,வெங்கடேஷ் ,சந்தோஷ் , அறிய
அயல் நாட்டில் இருப்பதால் நேரில் வாழ்த்த முடியவில்லை .......
வாழ்த்துகிறேன் பாசத்துடன் .........
பாசத்துடன்.... திறந்த மனதுடன் ....நண்பர்களாக.... சந்தோஷமாக பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ........
தகவல் களஞ்சியம் தேவாவுக்கு நன்றி .......
நெ.ஜெகதீஷ்குமார்

Monday, March 8, 2010
I Inviting all of u
Dear Friends,
I inviting all of u and u r family to attend my marriage on 19th march Friday in Chennai. We would be honored if you would share this special occasion with us. Please find the attached wedding invitation.
thank Q
--
regards
regards
Santhosh Kumar
0065 8261 7977
0091 99529 85013
0065 8261 7977
0091 99529 85013
Thursday, March 4, 2010
வாழ்த்துக்கள் தங்கராஜ்

Monday, March 1, 2010
அப்படியேதானிருக்கிறது

ஒரு இடத்தின் வளர்ச்சியானது அதன் அருகிலோ அல்லது அப்பகுதியிலோ நிலவும் சாதகமான காரணிகள் மற்றும் நிறுவனங்களை பொறுத்ததாக அமையும். அந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் அந்த பகுதியின் மாற்றங்கள் நமக்கு வியப்பைத் தருகின்றது. ஆம் ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட கடைகள் புலவர்பாளையத்தில் அமைந்து, நகரத்தின் பொருட்கள் யாவும் அப்பகுதி மக்களுக்கும், மாணாக்கருக்கும் கிடைக்கும் வண்ணம் அனைத்து விதமான கடைகளும் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் 25 ஆண்டுகளைக் கடந்த EICT நடுப்பட்டி?
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அது கோணலாக இருப்பது தெரியும். பேருந்தில் பயணிக்கும்போது எடுக்கப்பட்டதால் ஏதேச்சையாக அப்படித்தெரிந்தாலும், அந்த புகைப்படம் EICTயின் உண்மை நிலையை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைக்கு EICT ஆனது பொறியியல் கல்லூரியாக உயர்ந்து! இருந்தாலும், மூன்று பேருந்துகள் நிற்பது நம் கண்ணுக்கு தெரிந்தாலும் அங்கே உள்ள கட்டடங்களும் நடுப்பட்டியின் பொட்டல் காடும் நமக்கு இன்றும் உணர்த்துவது யாதெனில் இன்னும் நமது EICT அப்படியேதானிருக்கிறது என்பதே.
Saturday, February 27, 2010
புதியதொரு வாழ்க்கைப்பயணம்
தனி மனிதன் என்ற நிலையைத் தாண்டி, சமுதாயத்தின் மதிப்புமிக்க ஒரு அங்கத்தினராக மாற்றுவது திருமணம். அத்தகையதொரு புதியதொரு வாழ்க்கைப்பயணத்தில் மாறுபட்ட சூழ்நிலையில் அடியெடுத்து வைத்திருக்கும் இரு நண்பர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பரவாயில்லை இனிமேல் நண்பர்கள் தங்களது திருமணத்திற்கு பிற நண்பர்களை அவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அழைப்பது ஒவ்வொருவரின் கடன் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
Thursday, February 25, 2010
வாழ்த்துக்கள்!!
என் அன்பு நண்பர்கள் பிரசன்னா மற்றும் வேங்கடேஷ்க்கும் இன்று மணவிழா!!!
அங்கு இரு மனமும் திருமணத்தில் முடிந்து இத்தினத்தில் இருந்து நல்வாழ்கையை தொடங்குகின்றனர்.
திருமணத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தூரத்தால் நாங்கள் பிரிந்திருந்தாலும், உள்ளத்தில் திருமணத்தில் இருந்ததாய் எண்ணி அவர்களை வாழ்த்துகின்றோம்.
நண்பர்கள் அவரவர் தம் மனைவியுடன் சகல செல்வங்களும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
நண்பர்கள்.
Saturday, February 20, 2010
வெள்ளாங்கோயில் வெங்கடேசுக்கு கல்யாணம்
நண்பர்களே இந்த ஆண்டு அதிக அளவில் திருமணங்கள் இருக்கும் என எண்ணுகிறேன்.பல நண்பர்களிடம் விசாரித்ததில் பலருக்கும் இந்த வருடம் மண வாழ்வில் நுழையும் கால கட்டமாக இருக்கப்போகிறது என உணர்ந்து கொண்டேன். நல்லது, வயதும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா?. இதோ அந்த வரிசையில் நமது பாசத்திற்கும், நேசத்திற்குமுரிய நண்பன் வெள்ளாங்கோயில் வெங்கடேசுக்கு திருமணம். திருமண நாள் பிப்ரவரி 25. தேனி பிரசன்னாவிற்கும் இதே நாளில் தான் திருமணம்.
நண்பர்கள் இருவரின் திருமணங்களும் ஒரே நாளில் நடப்பதால் எந்த திருமணத்திற்கு போவது என குழப்பம் வேண்டாம்? 26ஆம் தேதி வெங்கடேஷ் திருமண வரவேற்பு வைத்துள்ளான்.
நண்பர்களின் திருமணங்கள் என்பது நாம் ஒன்றாக சந்திக்க வரும் வாய்ப்புகள். ஆனால் பலருக்கும் வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. வேலை, விடுமுறை, செலவுகள் மற்றும் சோம்பேறித்தனம் என சில தடங்கல்கள் நாம் போகலாம் என நினைத்தாலும் திருமணங்களில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
எது எப்படி இருப்பினும் அழைப்பது கடமை. ஏனெனில் மாப்ள சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிகிட்டியே? என யாரும் கேட்டுவிடக்கூடாது அல்லவா. வெள்ளாங்கோயில் பாசத்துடன் அழைத்துள்ளான், கலந்துகொள்ள முயலுவோம்.
தொடர்புகொள்ள: 9865635948 / venki_pct@yahoo.co.in
Tuesday, February 9, 2010
அணுகுதல்
அது என்ன அணுகுதல் தலைப்புல இருக்குனு நினைக்கிறயா?
அணுகுதல்னா நிறைய எழுதலாம் தான் ஆனா நான் எழுத போறது அது இல்ல மச்சி நமக்குள்ள இருக்குற நட்பின் அனுகுமுறை பத்தி...அதுல என்ன இருக்குதான யோசிக்கிற
நான் எதுவுமே எழுத போறது இல்ல, "நீ" தான் எழுதனும்.
நான் நினைக்குறது ஒன்னே ஒன்னு தான், எப்படி நமக்குள்ள இந்த இடைவெளியை குறைக்கிறது தான்...என்ன தான் சிரில் இந்த இடைவெளி குறைக்க சில படிகள் முன்னேடுதாலும் ஆங்காங்கே தொய்வு இருப்பதாக என் எண்ணம்.
ஏன்னு யோசிச்சா சில காரணம் தோணுச்சு
1.இணையம் (INTERNET)
2.பகிர்வதற்க்கு ஒன்னும் இல்லாதது போன்ற ஒரு மாய தோற்றம்
(NOTHING TO BE SHARE WITH OURSELVES)
3. முன்னிருத்தாமை அல்லது வட்டம் இல்லாமை.
4.தயக்கம் (SHYNESS)
5.கடந்த காலங்களில் தேங்கி நிற்பது.
இதையும் தாண்டி உங்களுக்கு நிறைய தோணும், இல்ல மாற்றுக் கருத்து இருக்கும். ஆகவே, தயவுசெய்து இதில் பதிவு செய்யவும்.
Monday, February 1, 2010
பிரசன்னா அனுப்பும் மண ஓலை!!!
பிரசன்னா என்றவுடன், எந்த பிரசன்னா? என்ற குழப்பம் வருவது தவிர்க்க இயலாதது. ஏனெனில் நம்மோடு படித்தவர்களில் மற்ற எந்த பெயரையும் விட இந்த பெயரில் தான் மூன்று நபர்கள் படித்தனர்.
மாறி வரும் கால, கலாச்சார நடைமுறைகளில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றது. நமது சமுதாய வளர்ச்சிக்கு இத்தகைய காதல் கலியாணங்கள் அவசியமானதுமாக இருக்கிறது. சாதிகள் மறந்து இரு மனங்கள் இணையும்போது, இரு குடும்பங்கள் உறவுகளாகிறது. இத்தகைய குடும்பங்களும், அவர் தம் உறவுகளும் வருங்கால சந்ததியினருக்கு சாதிகளற்ற மனப்பாங்கை ஊட்டி வளர்ப்பதில் முன்னணி வகிக்கின்றது.

நான் மேற்கூறிய காரணங்கள் எதற்காக என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆம் மற்றுமொரு காதல் திருமணத்தை வாழ்த்த நாம் அழைக்கப்படுகிறோம். அழைப்பவர் நமது பாசத்திற்குரிய தேனி பிரசன்னா. வரும் 25 ஆம் நாள் வியாழக்கிழமையன்று பழனியில் வைத்து நடைபெற இருக்கின்றது. நண்பர்கள் அனைவரையும் நண்பன் பிரசன்னா அன்போடு அழைக்கின்றார்.

தொடர்பு கொள்ள: பிரசன்னா
97901 57650
Sunday, January 24, 2010
எது குடியரசு?
நாளை மறுநாள் குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கிறோம்? முடியாட்சியை ஒழித்து உருவானது தான் குடியரசு. குடியரசு தினத்தை கொண்டாட அழைக்கப்பட்டிருக்கும் நாம் இந்தியக் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதை விட, இந்திய முட்டாள்கள் என்பதில் சிறுமைப்படுத்தப்படுவதிலே தான் பெருமிதம் கொள்கிறோம்! ஆம் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, நம் தாய் தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்தியக் குடியரசு முழுமையையும் ஆராய்ந்து பார்த்தொமானாலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். எப்படி? இங்கே கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி -கனிமொழி-தயாநிதி-உதயநிதி-பேரன் பேத்திகள்..., கர்நாடகத்திலே தேவகௌடா-குமாரசாமி, ஆந்திரத்திலே, ஒரிசாவிலே என் அடுக்கிக்கொண்டே போகலாம். இறுதியிலே மத்தியில் பார்வையை திருப்பினால் வருத்தங்களே மிஞ்சும்.
முடியரசை ஒழித்தோம் இந்தியாவை இணைத்தோம் என மார்தட்டும் காங்கிரசு கட்சிக்கு நேரு குடும்பத்தை விட்டால் வேறு ஆட்களே இல்லை தலைமைப் பதவியேற்பதற்கு என்பது கேவலமாகத் தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள் இது குடியரசா இல்லை முடியரசா? சற்று ஆழ ஊன்றி சிந்தித்தோமானால் பிரித்தாளும் கொள்கையால் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயக் கொள்கைகளைத் தான் இன்றைக்கு நமது தேசத்தின் கட்சிகளும் பின்பற்றி, நம்மை கோமாளிகளாக்கி வருகின்றது எனும் உண்மை புலப்படும்.

நோயுற்றவனுக்கு உதவி புரிகிறது கலைஞர் காப்பீட்டு திட்டம் என பிதற்றுபவனுக்கு புரிவதில்லை அந்த திட்டத்திற்கான மதிப்பீடு டாஸ்மாக்கின் ஒரு சில நாள் வருமானம்தான் என்பது. மூளையை அடகு வைத்த நம் இனத்திற்கு, மொழிக்கு, நாட்டிற்கு தேவை விழிப்புணர்வு. அது எங்கனம் கிடைக்கும்? நம் பண்பாட்டின் வழி, தன் தாய் மொழியின் வழியே அன்றி வேறு வழியிலில்லை.
ஒவ்வொருவனும் தன் தாய் மொழியையும், தனது கலாசாரத்தின் உண்மையான சாராம்சத்தையும் உணராமல் பெறும் வளர்ச்சி உண்மையான வளர்ச்சியாகாது. கொண்டாட்டங்களும் அது போலத்தான், செம்மறி ஆட்டுமந்தைகளைப் போல அல்லாமல் பகுத்தறியும் மனிதனாக சிந்தித்து சரியான மாற்றங்களை ஆதரித்து, தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதிலேதான் நம் மனித வாழ்வு இருக்கிறது. "பார்வையாளன் பங்கேற்பாளனாவதில்லை" என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களில் பங்கேற்க முயலுவோம் அல்லது துணைபுரிவோம். உண்மையான குடியரசு கொண்டாட்டங்களில் இல்லை. நல்ல குடியாட்சியில் வாழ்வதில் தான் உள்ளது.
நட்புடன்,
Friday, January 22, 2010
Thursday, January 21, 2010
Monday, January 11, 2010
Subscribe to:
Posts (Atom)